Mexico Flight Accident | அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

Dec 23, 2025 - 14:30
 5
Mexico Flight Accident | அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

 Mexico Flight Accident | அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கால்வெஸ்டன் வளைகுடா பகுதியில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான இந்த விமானம், குழந்தையின் மருத்துவ அவசர சேவை பணிக்காக புறப்பட்டுச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் மருத்துவ பணியாளர்கள், விமானக் குழுவினர் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவ சேவைக்காக சென்ற குழந்தை உட்பட விமான விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க கடலோர காவல்படை, உள்ளூர் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இணைந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த துயரச் சம்பவம் குறித்து மெக்சிகோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முடிந்த பின்னரே விபத்திற்கான முழு விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.