மற்ற கட்சி எனக்கு எதுக்கு? தவெக குறித்து ஈபிஎஸ் கருத்து!

வெற்று அறிக்கை விட கூடாது

Dec 22, 2025 - 17:22
 2
மற்ற கட்சி எனக்கு எதுக்கு? தவெக குறித்து ஈபிஎஸ் கருத்து!

மற்ற கட்சி எனக்கு எதுக்கு? தவெக குறித்து ஈபிஎஸ் கருத்து!

தவெக தூய கட்சியா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்  என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு இனியும் ஆட்சிக்கு வர முடியாது இதுவே திமுகவுக்கு இறுதி ஆண்டு. இறுதி ஆண்டில் ஆட்சி நடத்தும் திமுக இந்த ஆண்டாவது மக்களுக்கு பொங்கல் பரிசை திருப்திகரமாக கொடுக்க வேண்டும்.

மாநில அரசுக்கு உள்ள நிதி பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் வெற்று அறிக்கை விட கூடாது.

நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசாமல் வெற்று அறிக்கைகளும் மழுப்பலான பதிலையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு தப்பிக்க கூடாது.

ரயில் கட்டணத்தை உயர்த்த கூடிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஈபிஎஸ் கோரிக்கை.

விலைவாசி உயர்வு, ஊதிய உயர்வு காரணமாக ரயில் கட்டணம் உயர்வு என ஈபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.