மழைக்கால உணவில் மசாலா சேர்ப்பது அவசியமான ஒன்று…..எந்தெந்த உணவுகளை எடுப்பது நல்லது என தெரிந்து கொள்வோம்!

மழைக்காலத்தில் மோர், தயிர் சாப்பிடுவது நல்லதா ?

Dec 18, 2024 - 17:45
Dec 18, 2024 - 18:01
 11
மழைக்கால உணவில் மசாலா சேர்ப்பது அவசியமான ஒன்று…..எந்தெந்த உணவுகளை எடுப்பது நல்லது என தெரிந்து கொள்வோம்!

மழைக்கால உணவில் மசாலா சேர்ப்பது அவசியமான ஒன்று….. எந்தெந்த உணவுகளை எடுப்பது நல்லது என தெரிந்து கொள்வோம்!

மழைக்காலத்தில் மோர், தயிர் சாப்பிடுவது நல்லதா?

         மழைக்காலத்தில் செய்யும் உணவுகளில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, இலவங்கம், பட்டை, ஏலக்காய், சுக்கு மற்றும் ஜாதிக்காய் போன்ற மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

        அழற்சி எதிர்ப்பு கொண்டுள்ள பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அதிகரிப்பு போன்ற பண்புகளை கொண்டது.

        இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன. இந்த மசாலாக்களை சரியான அளவில் பயன்படுத்தி வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

மழைக்காலங்களில் அவசியம் வேண்டிய உணவுகள் ;

  • மழைக்காலத்தில் மோர், தயிர் சாப்பிடுவது நல்லதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் பாலை விட தயிர், மோர் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது என பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் மழைக்கால ஈரப்பதம் காரணமாக பாலை சரியாக கொதிக்க வைக்காவிட்டால், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் தயிர் மற்றும் மோரில் புரோபயாடிக் எனப்படும் பாக்டீரியா உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது.

  •                 சுண்டைக்காய், வேப்ப விதைகள், டேன்டேலியன் கீரைகள் மற்றும் மூலிகை தேநீர் போன்ற உணவுகள் நச்சுகளை அகற்றுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இந்த உணவுகளில் கால்சியம் மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய், ஒவ்வாமை ஆகியவற்றை எதிர்த்து போராடத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

  • காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை பச்சையாக சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் முகப்பரு போன்ற தோல் நிலைகளைக் குறைக்க உதவுகிறது. தயிர் மற்றும் மோர் போன்ற சத்தான பால் பொருட்களை உட்கொள்வது மழைக்காலத்தில் நோய்களைத் தவிர்ப்பதற்கு உதவும்.

  •        மழைக்காலத்தில் தேநீர் எப்போதுமே இதமான உணர்வு தரக்கூடியது. எனவே க்ரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ என உங்களுக்குப் பிடித்த தேநீரை பருகலாம். அதேபோல் காய்கறிகள், சிறுதானியங்கள் அல்லது பருப்பு வகைகள் அடங்கிய சூப்களும் மழைக்காலத்திற்கு ஆரோக்கியமான ஒன்று தான்.

 

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவை :

  •        இலை காய்கறிகள் மழைக்காலங்களில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு உகந்த சூழல், இவை வயிற்றில் தொற்று உண்டு செய்யும். எனவே காலிஃபிளவர், கீரைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

  •        மழைக்காலத்தில் மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும். நீரில் உள்ள நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மீன்களை பாதிக்கலாம் எனவே இதை தவிர்ப்பது நல்லது

  •        வேகவைக்காத உணவுகளை மழை நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

  • தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சளித்தொந்தரவை உருவாக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.