Microsoft CEO சத்யா நாடெல்லாவை பற்றிய ஒரு பதிவு | Microsoft Build 2024

May 30, 2024 - 16:53
May 30, 2024 - 16:55
 15
Microsoft CEO சத்யா நாடெல்லாவை பற்றிய ஒரு பதிவு | Microsoft Build 2024

Microsoft CEO சத்யா நாடெல்லாவை பற்றிய ஒரு பதிவு | Microsoft Build 2024

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்துவது வழக்கம் அந்த வகையில் மைக்ரோசாப்டின் ‘பில்ட் 2024’ மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னேற்றங்கள் குறித்து, மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பேசும்போது, தொழில்நுட்பம் மூலம் மாற்றம் கண்ட ஒரு இந்திய விவசாயியின் அசாதாரண கதையை அவர் பகிர்ந்துகொண்டார். Azure மற்றும் Copilot போன்ற மைக்ரோசாப்டின் புதிய மேம்பாடுகள் மற்றும் Open AI போன்ற நிறுவனங்களின் முன்னேற்றங்களை அவர் விளக்கினார். “ஜனவரி 2023ல், GPT-3.5 ஐ பயன்படுத்திய ஒரு கிராமப்புற இந்திய விவசாயியை நான் சந்தித்தேன். அவர் தொலைக்காட்சியில் கேட்ட அரசாங்கம் வழங்கும் மானியங்களை புரிந்துகொள்ள GPT-3.5 ஐ பயன்படுத்தினார். இது எனக்கு கிடைத்த அற்புதமான அனுபவம். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன மாதிரியின் அதிசய தாக்கம், இப்போது இந்தியாவில் ஒரு கிராமப்புற விவசாயியின் வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்த உதவியது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.