நடுரோட்டில் பற்றி எரிந்த கார்

பொன்னமராவதியில் நடுரோட்டில் பற்றி எரிந்த கார்!

Jul 11, 2024 - 23:37
Jul 12, 2024 - 00:31
 7
நடுரோட்டில் பற்றி எரிந்த கார்

பொன்னமராவதியில் நடுரோட்டில் பற்றி எரிந்த கார்!

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதியை சேர்ந்தவர் சோலையப்பன்‌‌. இவருடைய சைலோ காரை அவருடைய ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி சோலையப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்பொழுது பகவாண்டிப்பட்டி அருகே கார் செல்லும் பொழுது திடீரென காரின் முன்பக்கம் பக்கத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது.காரில் தீப்பற்றியதை உணர்ந்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட சதீஷ்குமார் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார்.காற்றின் வேகத்தில் மலமலவன என பரவிய தீயால்  கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த காரின் தீயை அணைத்தனர். நடுரோட்டில் கார் தீப் பற்றி எரிந்த சம்பவம் பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.