பிரதமர் மோடி, குடியரசுத் தலைவருக்கு எச்சரிக்கை!
விளக்கமளித்து வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவருக்கு எச்சரிக்கை!
ஆப்ரேசன் சிந்து தொடர்பாக ஆலோசிக்க எல்லையோரங்களில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர்களுக்கும் அமித்ஷா அழைப்பு.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி குடியரசு தலைவரை சந்தித்து விளக்கமளித்து வருகிறார் பிரதமர் மோடி.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்த சில நாட்களுக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர் ஆகியோர் எங்கும் தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் எல்லை மாநில முதலமைச்சர்களுக்கும், தலைமை செயலாளர்களுக்கும், டிஜிபிக்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தான் அருகே உள்ள மாநில முதல்வர்களுக்கு உயர்மட்ட ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இன்று இரவு அல்லது நாளை பாகிஸ்தான் பதலடி கொடுக்க வாய்ப்புள்ளதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலை தொடர்ந்து, வடமாநிலங்களில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.