ஜெகன் மோகன் ரெட்டியின் பங்குகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை பறிமுதல்

Apr 18, 2025 - 18:47
 6
ஜெகன் மோகன் ரெட்டியின் பங்குகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!

ஜெகன் மோகன் ரெட்டியின் பங்குகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!  

ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.27.5 கோடி பங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

14 வருட பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சிபிஐ 2013 ஆம் ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெகன் மோகன் ரெட்டி, DCBL மற்றும் பிறர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஈஸ்வர் சிமென்ட் நிறுவனத்திடமிருந்து சுரங்க குத்தகையை DCBL - க்கு மாற்றியதும் இந்த வழக்கில் அடங்கும்.

மேலும்ஜெகன் மோகன் ரெட்டி, ஆடிட்டரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. விஜய சாய் ரெட்டி மற்றும் டிசிபிஎல்லின் புனித் டால்மியா ஆகியோருடன் சேர்ந்து, ரகுராம் சிமென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை பிரெஞ்சு நிறுவனமான PARFICIM-க்கு ரூ.135 கோடிக்கு விற்க ஒப்பந்தம் செய்ததாக அந்த நிறுவனங்கள் குற்றம்சாட்டியிருந்தன.

இதில் மே 16, 2010 முதல் ஜூன் 13, 2011 வரை 55 கோடி ரூபாய் ஹவாலா மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரொக்கமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிவர்த்தனைகள் டெல்லி வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் 14 வருட பழமையான இந்த பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.