பள்ளிகளில் சாதி பெயர் இருந்தால் நடவடிக்கை.... ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதி பெயர் கூடாது

பள்ளிகளில் சாதி பெயர் இருந்தால் நடவடிக்கை.... ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க உத்தரவு.
சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்.
சங்கத்தின் பெயரில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கி சங்க சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அனுக உத்தரவு.
சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்ய கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் – நீதிபதி
திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – நீதிபதி உத்தரவு
பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை மாற்றி அரசு பள்ளி என பெயர் சூட்ட வேண்டும்
பள்ளிப்பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும், சாதி பெயர் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.