திமுக-வை புரட்டிப்போடும் அமலாக்கத்துறை!

மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி & ஜெகத்ரட்சகன்

Mar 6, 2025 - 14:58
 2
திமுக-வை புரட்டிப்போடும் அமலாக்கத்துறை!

திமுக-வை புரட்டிப்போடும் அமலாக்கத்துறை

மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி & ஜெகத்ரட்சகன்

சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள எஸ்.டி.பி.ஐ அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதோடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் சக்தி மெஸ் சக்தி என செந்தில் பாலாஜிக்கு ஆதரவாளர்களின் இடங்களிலும், ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.