நெடுஞ்சாலைக்காக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி!

தஞ்சை, திருச்சியில் ரூ.20 கோடி ஒதுக்கீடு

Jan 3, 2025 - 12:38
Jan 3, 2025 - 13:59
 55
நெடுஞ்சாலைக்காக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி!

நெடுஞ்சாலைக்காக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி!

தமிழகத்தில் மட்டுமே கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், திருப்பூரில் மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.6.84 கோடி ஒதுக்கீடு. மதுரையில் மாநில நெடுஞ்சாலை 154ஐ விரிவுப்படுத்த ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை, திருச்சியில் மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை விரிவுபடுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு. திண்டுக்கல்லில் தர்மத்துப்பட்டி, ஆடலூர், தாண்டிக்குடி சாலையை விரிவுபடுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.