மருமகளாக வந்திருக்கிறேன்; வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்! 

முருகன் அருளால் தீபமும் ஏற்றப்படும்

Apr 17, 2026 - 17:05
 3
மருமகளாக வந்திருக்கிறேன்; வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்! 

மருமகளாக வந்திருக்கிறேன்; வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்! 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “முருகன் அருளால் தீபமும் ஏற்றப்படும்; இங்கிருக்கும் மக்களின் வாழ்க்கையும் உயரும்என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த மதுரையின் மருமகளாக, உங்கள் வீட்டுப் பெண்ணாக இந்த திருப்பரங்குன்றத்தில் கேப்டன் கட்சி ஆரம்பித்தார். ரெண்டு மருமகளும் சேர்ந்து வந்திருக்கிறோம்.

மதுரைக்கு இரண்டு மகளிராக வந்து உங்கள் எல்லாருக்காகவும் உழைப்பதற்கு உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம். மருமகளுக்கு வாய்ப்பு தருவீங்களா?” என வாக்கு கேட்டார்.

அதனைத்தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை. அடிப்படை வசதி செய்து தரவில்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

ஏற்கனவே தம்பி உதயா இங்கிருந்து கொண்டு போன ஒரு செங்கல் தமிழ்நாடு முழுக்க இன்னைக்கு அந்தச் செங்கல் பெரிய பேச்சுவாக்காக இருக்கிறது.

இப்ப முடிஞ்சிடுச்சா? இல்லையா எய்ம்ஸ்? இன்னும் முடியல. எப்ப மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் போறாங்க என்று தெரியல. நிச்சயமாக நம்ம வேட்பாளர் வெற்றி பெற்று சட்டசபையில் குரல் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையை உறுதியாக உங்களுக்காக கொண்டு வருவார்என்றார்.

மேலும், மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். “அண்ணாமலை அவர்கள் மெட்ரோ கொண்டு தருகிறோம் என்று சொன்னார். ஆனால் இப்ப வரைக்கும் எந்த மெட்ரோ ரயிலும் நம்ம மதுரையில் இல்லைஎன்று விமர்சித்தார். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படுவது குறித்து பேசிய பிரேமலதா, “இங்கிருக்கிறவர்கள் எல்லாம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

வெளிய தொகுதியின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னைக்கு யாரும் பேச மாட்டேங்கிறாங்க.

அதனால இங்க மக்கள் நல்லா இருந்தாதான் தொகுதி நல்லா இருக்கும். எனவே நிச்சயமாக முருகன் அருளால் தீபமும் ஏற்றப்படும். இங்கிருக்கின்ற மக்களின் வாழ்க்கையும் உயரும்என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “கிருத்திகா தங்கபாண்டி இந்த மக்களின் வாழ்க்கையில் தீபம் ஏற்றுவார். ஒளி ஏற்றுவார்என்று கூறி, ஒற்றுமையாக இருந்து கிருத்திகா தங்கபாண்டிக்கு வாக்கு அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்