உணவில் கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்!
தரமான உணவுப் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும்!
உணவில் கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்!
புதுக்கோட்டையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார்.
இதில், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் தரமான உணவுப் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும், தரமற்ற உணவு பொருளை வாங்கக்கூடாது, சாலை ஓரங்களில் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்பது போன்ற பதாகைகளை கையில் ஏந்திய படி மாணவ மாணவிகள் சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி புதுக்கோட்டை நகர் மன்றத்தை அடைந்தது.