காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டது!

Apr 29, 2024 - 16:57
Sep 9, 2024 - 16:06
 21
காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டது!

உத்திர பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸின் கோட்டையாக பார்க்கப்படும் அமேதி தொகுதியில், கடந்த 2014ம் ஆண்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார்.

இதனையடுத்து, கடந்த 2019 தேர்தலில் ராகுலை எதிர்த்து சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களம்காண்கிறார். அதே நேரம், இத்தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கபடவில்லை. இதனிடையே, இங்கு ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

மக்களவைக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் மே.20ம் தேதியன்று அமேதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.