சங்கத்தில் இல்லை ஆனால் ரூ. 1 கோடி நிதியுதவி!
நடிகர் சங்க கட்டிடத்த கட்டி முடிக்கிறதுக்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுறதா சங்கம் சார்புல தெரிவிச்சிருந்தாங்க. அத தொடர்ந்து, அதுக்கான நிதிய நடிகர், நடிகைகள் கொடுத்துட்டு வராங்க. அந்த வரிசையில சமீபத்துல உதயநிதி, கமலஹாசன், விஜய் உள்ளிட்டோர் 1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தாங்க. அந்த வகையில தென்னிந்திய நடிகர் சங்கத்தோட மூத்த உறுப்பினரும் 2000 லயிருந்து 2006 ம் ஆண்டுகாலத்துல ச்ந்தக்கத்தோட உபதலைவரா பொறுபேற்று செயலாற்றிய நெப்போலியன் ரூ. 1 கோடிய வைப்பு நிதியா வழங்கியிருக்காரு. இந்த நிலையில நெப்போலியன் நிதியுதவி வழங்கியதா தென்னித்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றியையும் தெரிவிச்சிருக்காங்க.