அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Jun 8, 2024 - 22:28
Sep 9, 2024 - 23:35
 10
அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல்!

மூத்த பத்திரிக்கையாளரும், தயாரிப்பாளர் மற்றும் ஈநாடு குழும நிறுவனங்கள், ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச் ராமோஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார்.

தற்போது, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு ஹைதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வராக உள்ள சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலறும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை, கல்வி, நாளிதழ் என பல்துறை சாதனையாளரான ராமோஜி ராவுக்கு கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசால் பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. 

இதனிடையே, இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃப்லிம்ஸ் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈநாடு குழும நிறுவனர் ராமோஜி ராவின் இறப்பு செய்தி கேம் சேஞ்சர் படக்குழுவுக்கு கிடைத்ததை அடுத்து படப்பிடிப்பு இடத்திலேயே படக்குழுவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.