ராகுல் விட்டுக்கொடுக்கும் தொகுதி? சோனியா காந்தி கைக்கு வரும் பதவி?

Jun 8, 2024 - 20:18
Sep 9, 2024 - 23:35
 8
ராகுல் விட்டுக்கொடுக்கும் தொகுதி? சோனியா காந்தி கைக்கு வரும் பதவி?

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதே போல் பல மாநில தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தேர்தல் முடிவுகளின் எதிரொளிகள், பிற மாநிலங்களில் காங்கிரஸ் தேர்ச்சி பெறவில்லை. மத்திய பிரதேச மாநிலம், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, என எங்கெல்லாம் தோல்வியுற்றதோ, இதன் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  

முக்கியமாக எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவது குறித்து பிற மாநில தலைவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. சில மாநிலங்களில் ஏற்கனவே மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில், எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த கூட்டத்தில், பா.சிதம்பரம், மானிக்கம் தாக்கூர், தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு வேலை ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவர் பதவிக்கு மறுப்பு தெரிவித்தால் அடுத்த கட்டமாக யாரை நியமனம் செய்வது என்பது குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அடுத்து, ராகுல் காந்தி ரேபேலேரி மற்றும் வயநாடு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இதில் அவர் ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் எந்த தொகுதியை விட்டுக்கொடுக்கப் போகிறார்? என்பது குறித்த ப;ல்வேறு முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது.

இதனிடையே மதியம் 1 மணி அளவில் செய்தியாளர் செந்திப்பு நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும்.