சாருக்கானுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் அளித்த தகவல்!

பிரபல இந்தி நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாரூக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷாரூக்கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகப்படியான வெப்பம் மற்றும் நீர் இழப்பு காரணமாக அவருக்கு இவ்வாறு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, ஷாரூக்கானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள், திரையுலகினர் அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஷாரூக்கான் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.