இபிஎஸ்க்கு பதிலளித்த சிவசங்கர்!

May 23, 2024 - 01:34
 5

புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2011-2021 வரையிலான 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு 14,489 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது. 2006-2011 வரையிலான 5 ஆண்டு காலத்தில் திமுக அரசு 15,005 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது. தடை இல்லாத பேருந்து சேவையை மக்களுக்கு அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.