45-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று சாதனை | Chess Olympiad
45-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று சாதனை | Chess Olympiad
ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன. இதுதான் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வெல்லும் முதல் முறை. சிறப்பாக விளையாடிய அணிகளுக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்பட்டது. இந்த கோப்பையை 2022-ஆம் ஆண்டு பெற்ற இந்தியா, இந்த ஆண்டு மீண்டும் தக்க வைத்துள்ளது. மேலும், அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் தனிப்பட்ட நிலைகளில் தங்கம் வென்றனர்.
2022-ஆம் ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் வெண்கலம் வென்றன. இம்முறை, இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆடினர். வெற்றி பெற்ற அணிகள் நாடு திரும்பியபோது, பிரக்ஞானந்தா, "இந்த வெற்றி சதுரங்கத்தை மேலும் பரப்பும். இளைஞர்கள், குழந்தைகளிடையே சதுரங்கம் பிரபலமாகும்," என தெரிவித்தார்.