ஜனநாயகனை ஓவர்டேக் செய்த பராசக்தி!

5 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை

Jan 7, 2026 - 15:39
 3
ஜனநாயகனை ஓவர்டேக் செய்த பராசக்தி!

ஜனநாயகனை ஓவர்டேக் செய்த பராசக்தி!

ஜனநாயகன் டிரெய்லருக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரெய்லர் 5 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பராசக்தி. பராசக்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி யூடியூபில் 4.1 கோடி பார்வைகளை கடந்தது. 

அதற்கு பின் வந்த பராசக்தி திரைப்படத்தின் டிரெய்லர் ஜனநாயகன் டிரெய்லரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

திட்டமிட்டு பிரமோஷன் செய்யப்பட்டதாலேயே இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.