தமிழகத்தில் பரபரப்பு; வெளியானது திருப்பரங்குன்றம் தீர்ப்பு!

வாதம் நகைப்பிற்குரியது - நீதிபதிகள்

Jan 6, 2026 - 15:36
 6
தமிழகத்தில் பரபரப்பு; வெளியானது திருப்பரங்குன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் பரபரப்பு; வெளியானது திருப்பரங்குன்றம் தீர்ப்பு!  

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால், இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமானது என்று கூறிய நீதிபதிகள்,

தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற வாதம் நகைப்பிற்குரியது என்றும் கூறியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை கடந்த மாதம் இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

அனைத்து மேல்முறையீடு மனுக்களும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டன. சுமார் ஒரு வாரம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள், ஒவ்வொரு கார்த்திகையின் போதும் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது.

தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால், இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுஇரு தரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது. மத்திய தொல்லியல்துறை அனுமதியுடன் தீபம் ஏற்ற ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், அதனால் தீபம் ஏற்ற முடிடாது என்று தமிழக அரசு சொல்வது நகைப்பிற்குரியது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. தீபத்தூண் கோயில் நிர்வாகத்திற்கே சொந்தமானது.

அதனால் கார்த்திகை தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.