குற்றாவாளிகள் கைது! NIA அதிகாரிகள் அதிரடி!

Mar 29, 2024 - 18:57
 11
குற்றாவாளிகள் கைது! NIA அதிகாரிகள் அதிரடி!

கடந்த மார்ச் 1ம் தேதி கார்நாடக மாநிலத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்தது. இதில் பலறும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவர் குறித்த விவரங்களை என்.. தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபீர் உசேனை தேடி வந்த என்.. அதிகாரிகள் அவரை டெல்லியில் கைது செய்துள்ளனர்.

அதோடு, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்கள் உட்பட, டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் தஹாவையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதன் முன்னதாக கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்திரபிரதேசம் என மொத்தம் 18 இடங்களில் என்.. அதிகாரிகள் செய்த சோதனையின் அடிப்படையிலேயே ஷபீர் உசேன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன் விசாரணையில், குற்றவாளியாக கருதப்படும் இருவரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு தப்பியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தமிழகம் வந்துள்ளனர். இதனையடுத்து சென்னையிலிருந்து ஆந்திரா நெல்லூர் சென்றுள்ளனர்.

இவர்கள் புகைப்படத்தை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து என்.. அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் குண்டு வெடிப்புக்கு வாங்கிய பொருட்கள் அனைத்தும் சென்னையில் தான் என்பது குறித்த தகவலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.