திமுக பிரமுகர் வீட்டில் சோதனை!

Apr 1, 2024 - 23:30
 10
திமுக பிரமுகர் வீட்டில் சோதனை!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வடக்கு மாவட்ட திமுக தலைவர் பத்மநாபன் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கஸ்தூரி ரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவரான பத்மநாபன் ஓய்வு பெற்ற ராணூவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திமுக வில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டில் தூத்துக்குடி மாவட்ட வருமான வரித்துறை மற்றும் தென்காசி மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர், காவல்துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.