தயாரான வடக்கன்…ட்விஸ்ட் கலந்த திரில்லர்!

Apr 25, 2024 - 19:08
 7
தயாரான வடக்கன்…ட்விஸ்ட் கலந்த திரில்லர்!

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகும் படம் தான் வடக்கன்’.

எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடுஉள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவும், ‘அழகர்சாமியின் குதிரைதிரைப்படத்துக்கு கதாசிரியருமான பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படம் மூலமா இயக்குநராக அறிமுகமாகி இருக்காரு. தேனி ஈஸ்வர் இந்த படத்துக்கு ஒளிப்பதி செஞ்சிருக்காரு. இந்த படத்தோட போஸ்டர் மற்றும் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்கல்ல வைரலாகிட்டு வருது. சமீக காலமாகவே வடக்கன்ஸ் தான் தமிழகத்துல பெரிய பேசும் பொருளா இருந்துட்டு இருக்காங்க.  இந்த நிலையில வடக்கன் படத்துக்கான டீசரும் கொஞ்சம் ட்விஸ்ட் கலந்த த்ரில்லர் படம் மாதிரி தான் இருக்கு. இனைக்கு முக்கியமான ஒரு பிரச்சனையாகவும், ஒரு அரசியல்லாவும் பேசப்பட்டு வர இந்த வடக்கன்ஸோட ஆதிக்கம் பத்தி இந்த படம் எடுத்து சொல்ற மாதிரி இருக்கு . இதுனாலயே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில பெரிய அளவுல ஏற்படுத்தியிருக்கு.