Sundar C - யுடன் மீண்டும் இணையும் வடிவேலு! Sundar C | Vadivelu | Gangers
Sundar C - யுடன் மீண்டும் இணையும் வடிவேலு! Sundar C | Vadivelu | Gangers
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான "அரண்மனை 4" படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி என்ன படத்தை இயக்கப் போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
சுந்தர்.சியின் "கேங்கர்ஸ்"!
இந்த நிலையில் சுந்தர்.சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சுந்தர்.சி இயக்கும் புதிய படத்திற்கு "கேங்கர்ஸ்" என தலைப்பு வைத்து அதன் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அந்தப் படத்தில் வடிவேலு, கேத்ரீன் தெரசா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மீண்டும் இணையும் காமெடி கூட்டணி
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த வின்னர், தலைநகரம், நகரம் போன்ற படங்களில் வந்த காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிதளவு பேசப்பட்டது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் இவர்களின் கூட்டணி இணைவதால் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.