பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்!

Mar 29, 2024 - 23:52
 5
பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்!

அரசியல் களத்தில் முக்கிய தலைவர்களும், மாற்று கட்சியினரும் தொடர்ந்து பாஜகவில் இணைவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில்,

பிஜீ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான பர்த்துஹரி மஹதப் அக்கிட்சியிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்தார். இவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தாந்த் முகவத்ரா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற தமயந்த்ரி பேஸ்ரா ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பிஜீ தனதா தளம் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க நடத்திய பேச்சுவார்த்தை சமீபத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, பிஜூ தனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.