ஏமாற்றத்தில் சசிகலா! விரும்பாத தொண்டர்கள்!

May 10, 2024 - 00:46
 8
ஏமாற்றத்தில் சசிகலா! விரும்பாத தொண்டர்கள்!

சசிகலாவின் அறிவிப்பை, அதிமுக,வினர் யாரும் கண்டு கொள்ளாதது, அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொது செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் கட்சி லோக்சபா தேர்தலை சந்தித்துள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க என்ற கட்சியை துவங்கி அதன் பொதுச்செயலராக உள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை துவக்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

கட்சியினர் 3 பிரிவாக செயல்படும் நிலையில், கட்சியை ஒன்றினைக்கப் போவதாக அவ்வப்போது சசிகலா கூறி வருகிறார். அது போலவே தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள இந்த சூழலில் அதிமுகவர் அனைவரும் விண்ணப்ப படிவம் ஒன்றை பூர்த்தி செய்து தனக்கு அனுப்பும் படி கூறியிருந்தார். அந்தப்படிவத்தில் கட்சியில் இணைந்த ஆண்டு, கடந்த 2017 ஜன.1ல் கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுவதாக இருந்தால், அதன் பெயர், இதர அமைப்பில் தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகியவை கேட்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கட்சியினர் எந்த வித  பதிலும் அளிக்காததால் இது சசிகலாவுக்கு எமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.