ஓபிஎஸ்க்கு வந்த அதே சிக்கல்!

May 3, 2024 - 23:55
 11
ஓபிஎஸ்க்கு வந்த அதே சிக்கல்!

தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அவரது பெயர் கொண்ட பலர் போட்டியிட்டது போன்ற அதே சம்பவம் பீஹாரிலும் அரங்கேறியுள்ளது.

பீஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு, 7கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்குள்ள சரண் லோக்சபா தொகுதிக்கு, மே 20ல் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து, சரண் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான லாலு பிரசாத் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2017 மற்றும் 2022 ஜனதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களில் இவர் போட்டியிட்டுள்ளார். குறிப்பாக சரண் தொகுதியிலும் பலமுறை போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில், விளம்பரத்துக்காகவும், ஓட்டுக்களை பிரிப்பதற்காகவும் அவர் போட்டியிடுவதாக ரோஹினி ஆச்சார்யா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விவசாயி லாலு பிரசாத் கூறுகையில், ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் வென்றுள்ள இந்த தொகுதியில் அவருடைய மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். தற்போது அவரது மகளை எதிர்த்து போட்டியிடுகிறேன் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார். இதனால் அத்தொகுதியில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.