வாக்கு வங்கியை காப்பாற்ற போராடும் காங்கிரஸ்!

May 9, 2024 - 00:59
 6
வாக்கு வங்கியை காப்பாற்ற போராடும் காங்கிரஸ்!

வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித்ஷா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ், ராகுல் காந்தி என அனைவரும் ராமர் கோவில் விழாவுக்கு அழைக்கப்பட்டும் அவர்கள் தங்களது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இதில் கலந்து கொள்ளவில்லை.

இஸ்லாமியர்கள் வாக்கு தான் காங்கிரஸுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. எனவே தான் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போராடி வருவதாகவும், ராமர் கோவில் மட்டுமின்றி அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலையும் பிரதமர் மோதான் மறு உருவாக்கம் செய்தார். மேலும், இந்துக்களின் ஆன்மீக மையத்தை மோடி தான் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.