காங்கிரஸுன் முயற்சி அனைத்தும் வீண் தான்!

May 9, 2024 - 00:56
 6
காங்கிரஸுன் முயற்சி அனைத்தும் வீண் தான்!

இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் காலஹண்டியில் பாஜக வேட்பாளர் விஜய் சங்கல்பை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ஜவர்களால் நேரு தொடங்கி இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் வரை அனைவரும் வறுமையை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்து வந்தாலும் இதில் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டது.

ஆனால் மோடி 9 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது பாஜக கூறவில்லை நிதி ஆயோக் அறிக்கையையே கூறியிருக்கிறது. மோடியை போல் கடந்த எந்த அரசும் செய்யவில்லை. அடுத்த 5 ஆண்டுகளை பொறுத்தவரை இந்தியாவில் வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பம் இருக்காது என பிரச்சாரம் செய்தார்.