கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு குறித்து கட்சிகளிடையே விவாதம் எழுந்து வந்த நிலையில், ஒருபக்கம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளதும் மற்றொரு பக்கம் ஸ்வாதி மாலிவால் விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கெஜ்ரிவாலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பாஜகவிற்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என பிரச்சாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கெஜ்ரிவால் பேசுவதாகவும் தேர்தல் வெற்றி தோல்வியை வைத்து குற்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கிறது என கேள்வி எழுப்பினார்.
கெஜ்ரிவால் எங்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டாலும் முதலில் நினைவுக்கு வருவது டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தான் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.