விஜயகாந்த் நினைவிடத்திற்கு ’உலக சாதனை’ விருது!

May 3, 2024 - 23:25
 6
விஜயகாந்த் நினைவிடத்திற்கு ’உலக சாதனை’ விருது!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக போற்றப்பட்டு ‘லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் இன்றளவும் அவருடைய சமாதியில், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினந்தோறும் அங்கு சிறப்பு பூஜை நடைபெறுவதோடு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்தின் சமாதி போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அவரது நினைவிடத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.