லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாகி கைது!

பொன்னமராவதி அருகே கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Jul 24, 2024 - 00:56
Sep 9, 2024 - 22:38
 42
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாகி கைது!

பொன்னமராவதி அருகே கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளஆர்.பாலகுறிச்சி கிராம அப்பாதுரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்கள் இந்நிலையில் சிவக்குமார் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக ரூபாய் ஐம்பதாயிரம்  லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவக்குமார் புதுக்கோட்டையில் லஞ்ச  ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் இன்று பொன்னமராவதி வருவாய் அலுவலகம் அருகே உள்ள சேவை மையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி வருவாய் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஏஓ கைது செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.