வேகமெடுத்த கொடநாடு வழக்கு! சிக்கிய அதிமுக புள்ளி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு கொடநாடு வழக்கு மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. சிபிசிஐடி போலீசார் இதுவரை 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கொலை கொள்ளை சம்பவங்களில் இறந்து போன கனகராஜை தவிர மற்ற குற்றவாளிகள் அனைவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். இதன் பின்னணியில் கேரளாவை சேர்ந்த அதிமுக மாநில வர்த்தக அணி செயலர் சஜீவன் இருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. கோடநாடு எஸ்டேட்டில் அனைத்து மர வேலைபாடுகளையும் செய்தவர் அதன் அமைப்பை அறிந்தவர் என்பதால் அங்குள்ள ஆவணங்களை கொல்லை அடிக்க அவரே ஏற்பாடு செய்தார் என பலறும் சந்தேகம் எழுப்பினர். ஆனால் இந்த சம்பவம் நடந்த போது தான் துபாயில் இருந்ததால் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சஜ்ஜீவன் மறுத்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் அவர் துபாய் சென்றதாகவும் அதற்கு பரிசாகவே அவருக்கு மாநில நிர்வாகி பதவி கொடுக்கப்பட்டதாகவும் பலறும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதன் அடிப்படையில் சஜ்ஜீவனும் விசாரிக்கப்பட்டார். ஆனால் தற்போது வரை இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த சூழலில் தான் கடந்த மாதம் முதுமலை காப்பகத்துக்கு அருகில் தனியார் எஸ்டேட்டில் சருகுமான், காட்டுமாடு வேட்டையாடிய சிலரை வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்களையும் கைப்பற்றினர்.
சஜ்ஜீவனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் இவற்றை கைப்பற்றியதால் வேட்டையாடியவர் மீதும் சஜ்ஜீவன் மீதும் வனத்துறையினர் மற்றும் கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
வேட்டை சம்பவத்தில் சஜ்ஜீவன் சிக்கியது பெரும் திருப்பமாக கருதப்பட்டது. சஜ்ஜீவன் கைதானால் அதை வைத்து கோடநாடு வழக்கில் நடந்த உண்மை சம்பவங்களை வெளியில் கொண்டு வந்துவிடலாம் என தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் நினைத்திருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் இதில் ஆர்வம் காட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.ஆனால் வேட்டை சம்பவத்தில் சஜ்ஜீவனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்துவிட்டதால் இதனால் தான் அவர் உடனடியாக துபாய் சென்றுள்ளார்.
இதன் பின்னணியில் சஜ்ஜீவனுடன் தொடர்பில் உள்ள தமிழக வனத்துறையினர் உயர் அதிகாரிகள் சிலறும் நீலகிரி போலிசில் உள்ள சிலறும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கோர்ட்டில் ஜாமீன் பெற்ற பின்பே சஜ்ஜீவன் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கொடநாடு வழக்கில் மிக முக்கியமான பிடி நழுவி விட்டதாக போலீசார் தரப்பில் விரக்தி தெரிவிக்கின்றனர்.
மேலும், சஜ்ஜீவ் துபாய் தப்பி செல்ல உதவியாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.