அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதம் சுவாரஸ்யமாக இருக்கும் – ஜான்வி கபூர்

Jul 24, 2024 - 00:52
 16
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதம் சுவாரஸ்யமாக இருக்கும் – ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் கலக்கி வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அண்மையில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ம்ிஸ்டர் அண்ட் மிஸ்டர்ஸ் மஹி திரைப்படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர், மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் ‘சாதி’ குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துக்களையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்து கொள்ளலாம்.

சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என நான் நினைக்கிறேன்.

நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சனை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என கூறினார்.

இவருடைய கருத்து பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது.