ஒன்றிய குழு உறுப்பினர்களால் ஏற்பட்ட பரபரப்பு!

Jul 24, 2024 - 23:31
 20
ஒன்றிய குழு உறுப்பினர்களால் ஏற்பட்ட பரபரப்பு!
ஒன்றிய குழு உறுப்பினர்களால் ஏற்பட்ட பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி தலைமையிலும்,வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் முன்னிலையிலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில்,வேளாண் துறை. சுகாதாரத்துறைபொதுப்பணித்துறை. வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் மின்சாரத்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை அதற்கு ஒன்றிய குழு உறுப்பினர்திருப்புனவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி கூறுகையில் ஏன் இந்த கூட்டத்தில் மின்சார துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார் பின்னர், அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் ஏன் கலந்து கொள்ளவில்லை ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கூச்சலிட்டனர்.

இதை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதற்கு நான் தீர்மானம் எழுதி அவர்கள் ஏன் வரவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கிறேன் என்று கூறினார், அதன் பிறகு அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் சமரசம் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சாலைகள் சம்பந்தமாகவும் குடிநீர் புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவாதம் நடைபெற்றது இறுதியில்ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகையா அனைவருக்கும் நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.