அஞ்சலி செலுத்திய பிரதமர்.....இந்தியாவின் ஹிமாலய வெற்றி!
கார்கில் போரின் 25வது வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் கடமையின் போது உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தற்போது பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி வருகிறார்.
அங்கு கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய ராணூவத்திற்கு சொந்தமான விமானப்படை விமானங்கள் நினைவிடத்தின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தின.
இந்தியாவின் வரலாற்றில் வங்கதேச போர் சீன போர் ஆகிய போர்களுக்கு பிறகு கார்கில் போர் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு போராக பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலத்தில் இந்தியா எதிர்கொண்ட முக்கிய போராகவும் இது கருதப்படுகிறது. எனவே போரில் உயிர் நீத்த வீரர்கள் அனைவருடைய பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், 1999ம் ஆண்டு இந்திய நாட்டு எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் நாட்டினுடைய கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை வீழ்ச்சியடைய வைத்த இந்தியர்களின் வீரத்தை போற்றும் நாள் தான் கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த இடத்தில் தான் தற்போது பிரதமர் மோடி தனது அஞ்சலியை செலுத்தி வருகிறார்.