வளசரவாக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

Jul 19, 2024 - 18:30
 18
வளசரவாக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

வளசரவாக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

தேனாம்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்(42), போரூர் பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி செந்தில்குமார் அணிந்திருந்த மோதிரம் மற்றும் செல்போனை பறித்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்த நிலையில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர் காரம்பாக்கத்தை சேர்ந்த அபினாஷ்(19), என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோதிரம், செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.