முற்றுப்புள்ளி வைக்குமா உச்சநீதிமன்றம்?

Aug 8, 2024 - 23:32
Sep 9, 2024 - 20:24
 7
முற்றுப்புள்ளி வைக்குமா உச்சநீதிமன்றம்?

நீட் தேர்வு குறித்த பல்வேறு சர்ச்சைகள் சமீபகாலமாக நீடித்து வௌம் நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் திர்ப்பு வழங்க உள்ளது.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கவும், ஒரே தொகுதியாக நடத்தவும் உத்தரவிடக் கோரி, விஷால் சோரேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிய முறையீட்டை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க உள்ளது என்பது பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அரசியல் தரப்பிலும் மாணவர்கள் தரப்பிலும் ,மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.