புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி!
மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி அளிப்பதாக சட்டப்பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது சட்டப்பேரவையின் 8வது நாள் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன ஒரு பகுதியாக மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் புதுச்சேரி கோவில் மற்றும் மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டுமென ஒரு கேள்வியை எழுப்பினார். இதே போல் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்களும் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி புதிய மதுபான கொள்கைகளை கொண்டு வருவதற்கு அரசு தயாரக இருப்பதாகவும், புதுச்சேரிக்கு மதுபான கடைகளில் இருந்து தான் வருவாய் வருவதாகவும், பெங்களூரின் இரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பது போல் புதுச்சேரியிலும் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். பின்னர் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் எனவும் கூறினார்.