உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்கிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு….அரசு மரியாதையுடம் உடல் அடக்கம்!

Aug 9, 2024 - 22:57
Sep 9, 2024 - 20:00
 11
உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்கிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு….அரசு மரியாதையுடம் உடல் அடக்கம்!

புதுக்கோட்டையில் சாலை விபத்தில் மூளை சாவடைந்த 46 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலோடு இரண்டு சிறுநீரகம் இரண்டு கண்கள் இரண்டு நுரையீரல்கள் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு உத்தரவுபடி அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த பெண்மனியின் இத்தகைய செயலுக்கு பலறும் தங்களது இரங்களோடு பாராட்டுக்குறிய உருக்கமான பதிவையும் வெளியிட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்தவர் மாரிக்கண்ணு வயது 46 இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது இதில் பலத்த காயமடைந்த மாரி கண்ணு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இன்று காலை அவர் மூளை சாவு அடைந்தார்.

இதனை தொடர்ந்து அவரது   உறவினர்கள் ஒப்புதல் படி அவரது உடல் உறுப்புகள் இரண்டு நுரையீரர்கள் இரண்டு சிறுநீரகம் இரண்டு கண்கள்   கல்லீரல் தானமாக பெறப்பட்டது

இவைகள் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகியவற்று மருத்துவமனைகளுக்கு விரைவு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பப்பட்டது 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகளை மருத்துவர்கள் எடுத்தனர்

உடல் உறுப்புகளை தானமாக அளிக்கும்போது அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜமோகன் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மாரிக்கண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர் இதன் பின்னர் அவரது உடல் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் புறப்பட்டபோது மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜமோகன் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் மலர் தூவி ஆம்புலன்ஸுக்கு முன்னால் நடந்து வந்து அஞ்சலி செலுத்தினர்.