ஒரே நேரத்தில் இரு வழக்குகளை கையாளலாம்!

Aug 9, 2024 - 19:06
Sep 9, 2024 - 20:07
 6
ஒரே நேரத்தில் இரு வழக்குகளை கையாளலாம்!

ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வ இதற்கான விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது

ஒரு பிரச்னை தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் புகார் கொடுத்தால் அதனை காவல்துறையினரும், நீதிமன்றமும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நிர்மல்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதன் அடிப்படையில் ஒரு சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் கொடுத்தால், அதை கவனமாக கையாள வேண்டும் எனவும், பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பு புகார் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புகார் மற்றும் எதிர்புகார்கள் மீது விசாரணையை முடிந்த பிறகே, முதல் புகார் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  

இரண்டு புகார்களில் ஒரு புகாரில் உண்மை இல்லை என்று தெரியவந்தால் அதை முடித்துவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இரு இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இரு வழக்குகளையும் ஒரே நீதிமன்றம்தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.