நாணயங்களில் வெளியான முகங்கள்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழர்கள் பெயரில் வெளியான நாணயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
1995ல் முதன்முதலில் வள்ளுவருக்கு 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டது.
2004ல் முன்னாள் முதல்வர் காமராஜருக்கும், 2009ல் முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கும், 2010ல் சி.சுப்பிரமணியத்துக்கும் 100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
அதே ஆண்டு தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக முதன்முதலாக 1000 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
அதன் பின்னர், 2017ல் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 10 ரூபாய் 100 ரூபாய் நாணயங்களும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு 5 ரூபாய், 100 ரூபாய் நாணயங்களும் வெளியாகின.
இந்நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.