கனமழையுடன் சூராவளி காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

Dec 7, 2024 - 16:36
Dec 7, 2024 - 16:45
 7
கனமழையுடன் சூராவளி காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

கனமழையுடன் சூராவளி காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

அதோடு, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55கி.மீ வேகத்திலும் சூராவளி காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கல் செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து புகார்கள் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, மழை நீரை அகற்ற 1494 மோட்டார் பம்புகல், 158 அதி விரைவு நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 329 நிவாரண மையங்கள் 120 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மழைக்காலத்தில் பழுதடைந்த அல்லது வலுவிழந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.