மோடிக்கு நன்றி சொன்ன நடிகர் சரத்குமார்!

Oct 14, 2024 - 17:53
 10
மோடிக்கு நன்றி சொன்ன நடிகர் சரத்குமார்!

சீனாவின் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பண்டிகை கால பரிசு என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சீன லைட்டர்களின் வரவால் பாரம்பரியமான தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அனைத்து விதமானதொழில் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து உதவி வருவதை மக்கள் நன்றியோடு நினைவில் கொள்வார்கள் என்றும் நடிகர் சரத்குமார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பெட்டி தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்டு ப்ளாஸ்டிக் லைட்டர்கள் வருகைக்கு தடை விதித்த மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.