பாஜக தலைவர் மாற்றம்…அடுத்த லிஸ்டில் இருப்பவர்கள் யார் தெரியுமா?
அமித்ஷாவிடம் அதிமுகவினர் புகார்

பாஜக தலைவர் மாற்றம்…அடுத்த லிஸ்டில் இருப்பவர்கள் யார் தெரியுமா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியிருக்கிறது எனவே அதற்கேற்ப தலைவர் நியமனம் இருக்கும் எனவும் பேசப்படுகிறது.
கடந்த, 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் அண்ணாமலை. அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு 2021 ஜூலை 8ம் தேதி பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு அண்ணாமலை அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தான் காரணம் என அதிமுக தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்டது பாஜக.
குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக தேசிய தலைமைக்கு அண்ணாமலை வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்
ஆனால் தேர்தல் முடிவுகள் அவர் எதிர்பார்த்தபடி வராமல் தோல்வியை சந்தித்து 11% வாக்குகளை பெற்றது.
வாக்கு சதவீதம் குறைந்ததற்கு காரணம் அதிமுகவில் இருந்து கூட்டணி விலகியது தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
தற்போது பழைய கூட்டணியை இணைக்க முடிவு செய்துள்ளது பாஜக தலைமை. அதற்கேற்றவாறு 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும் என அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டிருந்தார்.
அதோடு, அதிமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
டெல்லியில் நடந்த சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுகுமுறை குறித்து அமித்ஷாவிடம் அதிமுகவினர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் அடிப்படையில் அண்ணாமலை டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் எனவும், தேவைப்படும் பட்சத்தில் தனது தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் எனவும், கூட்டணி குறித்து எந்தவொரு கருத்தையும் நான் கூற விரும்பவில்லை எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
மேலும், அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் இவர்களில் ஒருவர் அல்லது மீண்டும் அண்ணாமலையே தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.