பதவி பறி போகும் 3 மூத்த திமுக அமைச்சர்கள்?

Aug 22, 2024 - 20:16
 5
பதவி பறி போகும் 3 மூத்த திமுக அமைச்சர்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ம் தேதியன்று அமெரிக்கா செல்வதையொட்டி தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 1 மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்கள் அமைச்சராகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தமிழக அமைச்சர்களின் இலாகாக்களும் பெரிய அளவில் மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்  மற்றும் திமுகவின் கொரடாவாக இருக்ககூடிய கோவை செழியன் அவர்கள் புதிய அமைச்சராக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நிதித்துறையையும், மின்சாரத்துறையையும் தங்கம் தென்னரசு கவனித்து வரும் நிலையில் இந்த இலாக்காக்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது.

இதில், மூத்த அமைச்சர்களான காந்தி, மனோ தங்கராஜ், சி.வே கனேசன், மெய்யநாதன் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று மாலை அமைச்சரவை மாற்றத்துக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.