"சூர்யா 44" படத்தில் இணைகிறாரா பிரசாந்த்? Suriya | Prashanth | Karthik Subbaraj

Sep 12, 2024 - 01:05
 13
"சூர்யா 44" படத்தில் இணைகிறாரா பிரசாந்த்?  Suriya | Prashanth | Karthik Subbaraj

"சூர்யா 44" படத்தில் இணைகிறாரா பிரசாந்த்?  Suriya | Prashanth | Karthik Subbaraj

தமிழ் சினிமாவின் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். அதன் பின் அவருக்கு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் கால் பதித்துள்ளார். அதாவது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான "அந்தகன்" படம் அவருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடி தந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "கோட்" படத்திலும் பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

சூர்யாவுடன் இணையும் பிரசாந்த்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனமும் ,கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்  "சூர்யா 44" படத்தில் பிரசாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரீ என்ட்ரி மூலம்  மாஸ் காட்டி வரும் பிரசாந்த் தற்போது சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.