அடுத்த டெல்லி முதல்வராக அதிஷி ஆகவுள்ளதாக தகவல் | Atishi Named New Delhi Chief Minister

அடுத்த டெல்லி முதல்வராக அதிஷி ஆகவுள்ளதாக தகவல்
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, 48 மணி நேரத்திற்குள் துணைநிலை ஆளுநரிடம் அதை சமர்ப்பிக்க நேரம் கேட்டுள்ளார். இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடந்தது. கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷியை பரிந்துரை செய்தார், மற்ற எம்எல்ஏக்களும் இதை ஏற்றுக்கொண்டனர். அதிஷி அடுத்த டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என ஆம் ஆத்மி கட்சி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.