முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Jun 11, 2024 - 01:42
Sep 9, 2024 - 23:31
 8
முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.45.20 கோடி மதிப்பில் சொத்துகள் சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கே.பி.அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகள்கள், உறவினர்கள் என 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக 10 பேர் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஜூன் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.